வருடந்தோரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி உலக இதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் நோக்கம் உலக மக்கள் அனைவரும் தங்களுடைய இதயத்தை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.

கடந்த 1999 வரை செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இதய தினம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதன் பின்னர் அது செப்டம்பர் 29ஆம் திகதி ஆக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.04 World Heart Day

பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பாலர்களும் 30 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை இதயம் சார்ந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்காகவே உலக இதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதிலும் 17.3 மில்லியன் மக்கள் பக்கவாதம் மற்றும் இருதய நோயினால் இறக்கிறார்கள்.இலங்கையில் இடம்பெறும் உயிரிழப்புககளில் 34 வீதமானவை இருதய பாதிப்புக்களினால் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறு, பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் இதய பாதிப்பு ஏற்படலாம்.

உலக அளவில், பத்துக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்தில் பாடசாலை மாணவர்கள் அதிக எடை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிக எடை, இதய நோய் மற்றும் வலிப்பு நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும்..சமச்சீர் சத்துகள் உள்ள பழங்களும் காய்கறிகளும் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் வருவதைத் தடுக்க உதவுகின்றன.

இதயத்தில் ஏற்படும் நோய்கள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பது இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க ,ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இலங்கையில் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு இருதய விசேட வைத்திய நிபுணர்களின் நிறுவன அமைப்புடன் இணைந்து வருடந்தோரும் உலக இருதய தினம் கொண்டாப்படுகிறது. இலங்கையில் இம்முறை 2021 ஆண்டு “Use heart to connect”  என்ற தொனிப்பொருளில் உலக இருதய தினம் இடம்பெறுகிறது.

இதேவேளை ,இலங்கையில் வளர்ச்சியடைந்துள்ள தொழில் நுட்பத்திற்கு மத்தியில் தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட் தொற்றுக்கு மத்தியில் இருத நோய் மற்றும் தொற்றா நோய்க்கான பல் வேறு பொது மக்கள் சேவைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுவருகிறது.

தேசிய தபால் சேவையுடன் இணைந்து இருத நோய் மற்றும் தொற்றா நோய் தொடர்பில் கிளினிக் சிகிச்சைக்கு உட்பட்டவர்களுக்கு , அவர்களுக்கான மருந்துவகைகள் வீடுகளில் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த சேவையை 0720 720 720 /0720 606 060
என்ற தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் 1999 என்ற துரித தொலை பேசி இலக்கத்துடனும் 011 7 966 366 என்ற அனர்த்த காலப்பகுதியில் அனர்த்த முகாமைத்துவ பிரிவிலும் சுகாதார பிரச்சினை தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

புகைப் பழக்கமே இல்லாத 6 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் காற்றில் கலக்கும் புகையால் பாதிப்பட்டு உயிரிழகின்றனர். இதில் உலக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். புகைப் பிடிப்பதினால் 10 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
புகைப்பிடிப்பதை நிறுத்தி 15 வருடமான பிறகும்கூட மாரடைப்பு வரலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.

அதிக கொழுப்பு, அதிக இனிப்பு மற்றும் உப்பு உள்ள உணவை உண்ணுவது இதய நலனுக்கு பாதிப்பானது. இதனால் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் உண்டாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வெறுமனே உடற்பயிற்சியில் மட்டும் ஈடுபடாமல் தினமும் விளையாடுவது,  உடல்நலத்திற்கு உகந்தது என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

சரியான நேரத்தில் சீரான கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்வது.40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீரான இடைவெளியில் முழு உடற்பரிசோதனை செய்து கொள்வது, இரத்தத்தின் அளவை அடிக்கடி பரிசோதனை மூலம் கண்டஙிவது முக்கியமானதாகும்.
எண்ணெணய் பண்டங்களை அதிகம் உட்கொள்வதை தவிர்ப்பது மற்றும் அதிக மன அழுத்தம் வராமல் பார்த்து கொள்வது முக்கியமானதாகும்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.