எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்த கருத்துக்கள்;

நாடு இன்றும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளது.  இன்றும் நாட்டின் ஜனாதிபதியும் தளபதியும் இப்போது நாட்டில் இல்லை.  நாட்டு மக்கள் சார்பாக பாதுகாக்க முன்வந்த சுகாதார ஊழியர்களுக்கும் படைப்பிரிவினருக்கும் எங்கள் மரியாதையை செலுத்துகிறோம்.

இந்த முறை ஒரு பெரிய வைரஸ் நாட்டிற்குள் நுழைந்துள்ளது.  இந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்தே வந்ததுள்ளது.  அந்த வைரஸ் தான் நாட்டின் தலைமை.கொரோனா வைரஸுடன் ஒரு கொமிஸ் வைரஸும் பரவி வருகிறது.

உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற தடுப்பூசி போட்டனர்.  மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி போடப்பட்டபோது, ​​ஆனால் இங்கு அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே  அரசாங்கம் தடுப்பூசி வழங்கியது.  தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட நீடித்த தாமதத்தால் நாடு சீரழிந்துள்ளது.


இன்று சீனி இல்லை, மாவு இல்லை, மருந்துகள் இல்லை.  குறைந்தபட்சம் அடிப்படைத் தேவையை நிறைவேற்ற கழிப்பறைகளும் இல்லை.  வாகனங்களுக்குரிய உதிரி பாகங்கள் இல்லை.  நாட்டிற்கு பரவியுள்ள கொரோனா வைரஸுடன் பரவியுள்ள வைரஸுக்கு எதிராக நாங்கள் அணிதிரண்டு வருகிறோம்.  நாட்டில் உள்ள வைரஸ்களை சீரமைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

மத்திய வங்கியிலிருந்து வந்துள்ள வைரஸ், கமிஷன்களிலிருந்து வந்துள்ள வைரஸ், யானை கடத்தலில் இருந்து வந்துள்ள வைரஸ், உரங்களிலிருந்து வந்துள்ள வைரஸ் ஆகியவற்றை நாங்கள் கிட்டிய எதிர் காலத்தில் முன்வைக்கிறோம்.  இத்தகைய சகல வைரஸும் வெளிநாட்டிலிருந்து வந்தது.  எங்கள் ஜனாதிபதி, நிதி அமைச்சர் என்ற சகல வைரஸும் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ளது.  இந்த வைரஸ்களிலிருந்து நாம் எமது நாட்டை விடுவிக்க வேண்டும்.

நவம்பர் மாதத்திற்குள் தடுப்பூசிகள் கொடுத்து முடித்தமைக்கு ஒரு பெரிய விழாவை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.பிரதமர் இத்தாலியில் ஒரு பெரிய மாநாட்டிற்கு சென்றார். ஒரு வாரம் ஆகிவிட்டது.  நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது வாரக்கணக்காக ஏன் வெளிநாடு செல்கிறார்கள்? மக்களை முடக்கத்தில் விட்டு விட்டு தலைமைகள் வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றனர்.  நாட்டின் தலைவர் தனது சொந்த ஊருக்கே சென்றுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.