ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 44வது போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அணியும், கடைசி இடத்தில் உள்ள அணியும் தான் இன்றைய போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டி இரவு 7:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தொடரில் முதல் இடத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது

இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் 18 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல இன்னும் ஒரு சிறிய வாய்ப்பிருப்பதால் இன்றைய போட்டியில் சென்னை அணியை வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில், சென்னை அணி கடைசி பந்தில் வெற்றியை பதிவு செய்தது.

இதேவேளை, ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றியை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இனிவரும் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என்பதை சூசகமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த போட்டியில் இந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஜேசன் ராய், இனிவரும் போட்டிகளிலும் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் ஆட்டம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. அதே எழுச்சியை இன்றைய போட்டியிலும் காட்டும் பட்சத்தில், சென்னை அணிக்கு கட்டாயமாக இவர்களால் நெருக்கடி தர முடியும்.

இந்த அணியை பொறுத்தவரை அதன் பலமே கேப்டன் கேன் வில்லியம்சன் தான். இதனால் அவரது விக்கெட்டை வீழ்த்த சென்னை அணி அதீத முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. புவனேஸ்வர் குமார், ஜேசன் ஹோல்டர், சந்தீப் ஷர்மா, ரஷித் கான் ஆகியோர் பந்துவீச்சில் எதிரணியை அச்சுறுத்த காத்திருக்கின்றனர்.

இரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியதில் 11 வெற்றிகளுடன் சென்னை அணி.முன்னிலை வகிக்கின்றது

ஐபிஎல் புள்ளி பட்டியல்

IPL 2021 Ponit

 

 அரசாங்க தகவல் திணைக்களம்கருத்துரையிடுக

Blogger இயக்குவது.