வட்சப் மூலம் பணமோசடி மேற்கொள்ள முற்பட்ட இரு நைஜீரியர்கள் தெஹிவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பெண் ஒருவருக்கு பரிசு ஒன்று இருப்பதாகவும் அதனைப் பெற்றுக்கொள்ள பெரும் தொகை பணத்தினை தம்முடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறும் வட்சப் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர். 

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இரு நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் செப்டெம்பர் 24 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.