சம்பள முரண்பாட்டு பிரச்சினை தொடர்பில் தற்போது ஒன்லைன் கல்விச் சேவையிலிருந்து விலகியிருக்கும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், தமது சம்பள முரண்பாட்டு பிரச்சினை தீர்க்கப்படும் வரை கற்பிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க போவதில்லை என தெரிவித்துள்ளது.

தற்போது பாடசாலை மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முடிவடையும் தறுவாயில் அடுத்தமாதம் 200 ற்கு குறை்ந்த பிள்ளைகளைக் கொண்ட ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு பாடசாலைகளை மீள ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்திருந்தார்.

எனினும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக அல்லது பரீட்சை நடத்துவதற்கு முன்பாக தமது சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு அந்த சங்கத்தின் பிரநிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தமது பிரச்சினைகளை தீர்க்காது, 200க்கும் குறைவான மாணவர்களை கொண்ட சுமார் 5000 பாடசாலைகளை ஒக்டோபர் மாதம் 6ம் திகதி திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகர தேரர் குறிப்பிட்டார்.

பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை பாடசாலைகளுக்கு சமூகமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாகவோ அல்லது பரீட்சைகளை நடத்துவதற்கு முன்பாகவோ தம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நியூஸ் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.