பால் மா, எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் நேற்று (27) அமைச்சரவை சந்திப்பின் போது எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான உப குழு சந்திப்பின் போது மேற்படி பொருட்களின் விலை அதிகரிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் (27) இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு சந்தையில் எரிவாயு சிலின்டர்கள் அடங்கலாக பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளும் ஆங்காங்கே பதிவாகியிருந்தன.

போதியளவு டொலர் வழங்கப்படாமையால் துறைமுகத்தில் தடைப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு மத்திய வங்கியிடமிருந்து அவசியமான நிதியை வழங்குவதற்கு நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது அனுமதி வழங்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரிசி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் நீக்க தீர்மானிக்கப்பட்டதுடன், சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 100,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.