ராஜபக்‌ஷ அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்தார்களே தவிர நாட்டை சூறையாடவில்லை என்று கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் நள்ளிரவு 12 மணிக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சில நபர்களினால் பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. சீனாவுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த அபிவிருத்தியின் நன்மை, தீமை சம்பந்தமாக பாராளுமன்றத்தில் நாம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் தெரிவித்தார்.

அதி நவீன வாகனங்கள் மற்றும் கைத் தொலைபேசிகள் போன்றவற்றை இறக்குமதி செய்யாமல் இருப்பது பற்றிப் பேசுபவர்கள்  தடுப்பூசி கொள்வனவு செய்வதைப் பற்றி எதுவும் பேசவில்லை என்று கெளரவ அமைச்சர் சுட்டிக்காட்டினார். கொரோனா தடுப்பூசியை இந் நாட்டிற்கு கொள்வனவு செய்வதற்காக வேண்டி அதிகமான டொலர் தேவை என்பதால் சில பொருட்களைக் கொள்வனவு செய்வதில் கட்டுப்பாடு விதித்து மனிதாபிமான முறையில் மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

திவுலப்பிட்டிய, கொடதெனியாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள வாராந்த சந்தைக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் வைபவத்தில் கலந்து கொண்டு அமைச்சர் மேற்கண்டவாறு பேசினார்.

மாகாண சபைகள் ற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ரூ. 50 இலட்சம் ஒதுக்கீட்டில் இந்த வாராந்த சந்தை கட்டிடம் நிர்மாணிக்கப்படுகிறது.

இந்த் நிகழ்வில் திவுலப்பிட்டிய பிரதேச சபைத் தலைவர் இந்திக ஜயசிங்க, உப் தலைவர் ரஞ்சித் முணசிங்க, கொடதெனியாவ பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


முனீரா அபூபக்கர்

2021.09.25






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.