வெள்ளைப்பூண்டு ​மோசடி தொடர்பில் வெளிப்படுத்திய லங்காதீப, த ஐலன்ட் உள்ளிட்ட தேசிய பத்திரிக்கைகள் சிலவற்றின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலரை சிஐடிக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் ​பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும, ஊடகவியலாளர்களை விசாரணைகளுக்காக அழைக்க வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.