பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள்.இன்று, இந்த நாட்டில் பல பிரச்சினைகள் எழுந்திருக்கும் நேரத்தில் மற்றும் பல அரசியல் பிரச்சினைகளும் எழுந்துள்ளன.ஊரடங்கு காலத்தில் நிவாரணம் வழங்கத் தவறியதால் மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.  அரசாங்கம் மதிப்புமிக்க தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்துகிறது.  நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதோடு நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரும் முறைகளை தவிர்க்கும் முகமாக இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செழிப்பான  நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தொலை நோக்குத் திட்டம் ஒரு பத்து அம்சக் கொள்கையைக் கொண்டுள்ளது.நாட்டின் சுயாதீன இறையான்மைக்கு தீங்கு விளைவிக்காத பக்கசார்பற்ற நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதாக அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அதில் மக்களுக்கே அரசாங்கத்திற்கே எத்தகைய பாதிப்புகளையும் ஏற்ப்படுத்தும் எத்தகைய உடன்படிக்கைகளுக்கும் அவர் செல்லமாட்டார் என்றும் அவ்வாறு செய்ய மாட்டார் என்று மக்களுக்கு உறுதியளித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை திருத்தப்படும் என்றும் அந்தப் புத்தகத்தில் மற்றொரு  இடத்தில் 58 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதால் இந்தப் பேச்சுவார்த்தை இப்போது தொடங்கியிருக்கிறதா என்றும் சீனத் தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்றும் நாம் கேள்வி எழுப்புகிறோம்.

அமெரிக்காவின் புதிய போட்ரஸ்ட் எரிசக்தி நிறுவனத்திற்கு 40% பங்கை கொடுக்கும் விதமாக எங்கள் நாட்டின் யுகதானவி மின் நிலையம் விற்கப்பட்டுள்ளது.300 மொகா வோட்ஸ் உற்ப்த்தி திறன் கொண்ட இந்த நிலையத்தை 1000 மொகா வோட்ஸ் அளவில் உற்ப்பத்தி செய்ய முடியுமான திட்டங்களைக் கொண்டுள்ள நிலையில் அமெரிக்காவிற்கு நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு விற்றுள்ளனர்.எல் என் ஜி உற்பத்திக்கு பரிமாற்ற உகந்த இந்த மின் நிலையத்தை ஒரே இரவில் யாருக்கும் தெரியாமல் எத்தகைய விலை மனுக்கோரலும் இல்லாமல் விற்றுள்ளனர்.அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் என்னவென்று சரியான புரிதல் வழங்கப்படவில்லை.எரிசக்தி உற்ப்பத்தி நிலையங்களை எந்தவொரு நாடும் பிரிதொரு நாட்டுக்கு வழங்குவதில்லை.இது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகும்.நம் நாட்டின் மின் உற்பத்தித் தேவையில் 40% வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்வதால் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றுமன்றி மக்களின் அன்றாட ஜீவனோபாயத்துடன் தொடர்புடைய சகல விடயங்களுடனும் பாதிப்பை ஏற்ப்படுத்துவதாக அமையும்.ஆட்சியிலுள்ள அரச குடும்பத்தின் தனிப்பட்ட அபிப்பிராயத்தினால் நாட்டின் மின் உற்பத்தி நிலையத்தின் 40 % பங்குகள் வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கி தேசிய பாதுகாப்பிற்கு  அச்சுறுத்தலை உறுவாக்கியுள்ளனர். மின்சார சபையையும்  ஒப்படைப்பதற்கான ஷரத்துகளையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள் போலும். நள்ளிரவு 12 மணிக்குப் பின்  ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர்.இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். 

எம் சி சி ஒப்பந்தம் கருத்தாடலுக்கு வந்த போது அது அமெரிக்காவினதுடையது என்று கூறி தேசிய பாதுகாப்புடன் இனைத்து உணர்வுகளை தூன்டி விட்டனர்.

திருமதி சீதா அரம்பேபோல நாட்டின் சார்பாக அழுது அழுது உணர்வுகளைத் தூன்டி அவ்வாறு பேசுவதன் மூலம் அதிகாரத்தைப் பெற்றதை நாங்கள் நினைவில் கொள்கிறோம். அமெரிக்காவிற்கு எதிரான ஒரு குழுவினர் இருந்தனர்.விமல் வீரவங்ச,உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோர். அப்போது கோகோ கோலா பாட்டிலுக்கு எதிராகக் கூச்சலிட்டார்கள், மேலும் மக்டொனால்ட்ஸ் செல்ல வேண்டாம் என்று சொன்னார்கள். இன்று நாட்டின் மின் உறப்கத்தியை அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளனர்.இவ்வாறான சந்தர்ப்பத்தில் மேற்கூறிய கோஷங்களை எழுப்பியவர்கள் ஒழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.நாட்டின் அரசியலமைப்பு மாற்றப்பட்டு பாராளுமன்ற வந்த இந்த அமெரிக்க குடிமகன் பஷில் ராஜபக்‌ஷவே இவ்வாறு நாட்டின் மின் உற்ப்பத்தியை  தனது சொந்த அமெரிக்க நாட்டிற்கு கொடுத்துள்ளார்.

ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்காக கூறி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது, அமைச்சர் ரத்வத்த சிறைச்சாலை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் அமைச்சு இன்னும் அவரிடமே உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் இரத்தின கல் இடங்களிக்கு விலைமனு கோரல் இருந்தது.50% இரத்தினக்கல் ஆபரணங்கள் கூட்டுத்தாபனத்திற்கும் மிகுதி 50% முதலீட்டாளர்களுக்கும் என்ற வகையில்.இன்று இரத்தினக்கல் சார்ந்த மூன்று இடங்களும் டெண்டர் நடைமுறைகள் இல்லாமல் வழங்கப்படுகிறது. இலாபத்தில்  30% கூட்டுத்தாபனத்திற்கும் மிகுதி 70% இலாபமும் தனியார் நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. ஒருபுறம் நிதி அமைச்சர் அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்க பணம் இல்லை என்கிறார். கிரியெல்ல என்ற பிரதேசத்தில் நிலம் டெண்டர் இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் பேனாதே இவ்வாறு வழங்கியுள்ளனர். அயகம பகுதி மற்றும் வடவல பகுதிகளும் இவ்வாறு டெண்டர் இல்லாமலே வழங்கப்பட்டுள்ளது.

இன்று பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வருகிறது. பால் மாவின் விலை 200 ரூபாவிலும், மாவு 10 ரூபாவிலும், சிமெண்ட் 50 ரூபாவிலும், எரிவாயு 550 ரூபாவாலும் உயர்ந்து வருவதை ஊடகங்களில் கேள்விப்பட்டோம்.  நல்லாட்சி காலத்தில் உலகச் சந்தையில் விலைகள் குறைந்தபோது, ​​நம் நாட்டிலும் விலைகள் குறைக்கப்பட்டன. அதிக எண்ணிக்கையிலான வர்த்தமானிகள் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளன. அத்தியவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த இவர்களால் முடியாதுள்ளது.

இன்று, வெளிநாட்டு தொழிலாளர்கள் பெரிய ஒரு மாபியாவில் சிக்கியுள்ளனர். ரூ.1500 பெருமதியான விரைவான ஆன்டிஜென் பரிசோதனைக்கு ரூ.7,500 க்கு செலவழிக்க வேண்டும். பத்து நிமிட பரிசோதனைக்கு மூன்று மணித்தியாலங்கள் நாங்கள் காத்திருக்க வேண்டும். தொழிலாளர்களை கொள்ளையடிக்க அனுமதித்து விட்டு ஜனாதிபதி ஒரு குழந்தையைப் போல பார்த்துக்கொண்டிருக்கிறார். இன்று ஊழல் பரவலாக உள்ளதோடு நாடு ஒரு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களாக வேலை இழந்து, வருமானம் இழந்து மற்றும் சுயதொழில் இழந்த மக்களுக்கு அரசாங்கம் எந்த நிவாரணமும் அளிக்கவில்லை. இந்த அரசின் தவறான முடிவுகளாலும் நடவடிக்கைகளாலும் மிகக் குறுகிய காலத்தில் பாரிய மக்கள் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.அரசாங்கம் அரசியல் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்கிறது. இந்த நாட்டு மக்களை பற்றி நினைக்கவில்லை. இந்த அரசாங்கம் மக்களின் ஜீவனோபாயத்தையும் மக்களின் உயிர்களை காக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.நடைபாதைகளையும் அதிவேக வீதிகளையுமே அமைத்த வன்னமுள்ளனர்.இது படம் காட்டும் பகட்டு திட்டங்களாகும்.மக்கள் பிரயோசணம் பெறும் திட்டங்களையே இன்று மேற்கொண்டு மக்கள் பாதுகாக்கப்படுவதே முதன்மையானதாகும்.

அரச சொத்துக்கள் வெளிநாட்டினரிடம் ஒப்படைக்கப்படாது என ஜனாதிபதி ராஜபக்ஷ மக்களுக்கு உறுதியளித்து இன்று மக்களுக்கு தேசிய பாதுகாப்பை வழங்கியுள்ளார்.

நாட்டில் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்‌ஷவே கூறுகிறார். அரசாங்கத்தின் தவறான முடிவுகளால் சதொசவில் ஊழல் திருட்டுக்கள் இடம் பெறுவதாக அதன் ஆணையாளர் கூறினாலும் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.  வியத்மக ஆட்சியில் ஒரு புத்திஜீவியும் இன்மையால் பல குற்றச்சாட்டுகளைக் கொண்ட திரு.கப்ரால் இறுதியில் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.திரு.மகிந்த சமரசிங்க முக்கியமான தூதுவர் பதவிகளுக்கு செல்வதற்காக பதவியில் இருந்து விலகுவதை நாங்கள் பார்த்தோம்.வியத் மக புத்திஜீவிகள் இல்லை.

இன்று, நாட்டில் 12,000 க்கும் அதிகமான மக்களை இழந்துள்ளோம்.அவர்களில் எங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளனர்.மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

பயனற்ற மாநாட்டு அரங்குகளை நிர்மானத்து கமிஷன் எடுத்தவர்கள் தான் இப்போது நடைபாதைகளை நிர்மானித்து கமிஷன் எடுக்கிறார்கள்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.