தரவுகள் காணாமல் போனது தொடர்பான உண்மைகளைக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை சிஐடிக்கு வரவழைத்து உண்மையான பிரச்சினைகளை மூடி மறைக்கும் திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வரவழைக்கும் அரசாங்கம் இத்தகைய பொது மக்கள் பிரதிநிதிகளை சிஐடிக்கு அழைப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான மனுஷ நாணயக்கார அவர்கள் இன்று (30) காலை சிஐடிக்கு வரவழைக்கப்பட்டிருந்ததோடு அவருடன் இனைந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்தபோதே  எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

தரவை அளித்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வது போன்ற அறிவியல் விடயங்களை முன்வைத்த போது கட்டுக்கதையின் பின்னால் சென்ற அரசாங்கம், நாட்டில் பொய்களையும் வஞ்சகத்தையுமே பரப்பியது என்றார்.சட்டமா அதிபர் திணைக்களத்தின் கருத்தின் படி,தரவை அழிக்கும் செயல்முறைக்குப் பின்னால் மருந்துப்பொருள் மாபியா இருப்பதாகவும், அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் ஆபத்தானவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

கொரோனா மோசடி உற்ற குபேரர்களுடன் நடைபெற்று வருவதாகவும், அதன் மத்தியில் இனவாதம், மதவாதம் மற்றும் பிரிவினைவாதம் என்பன மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவதற்கான செயற்பாடுகள் இடம் பெற்று வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

தேசிய பாதுகாப்பு என்பது ஒரு பெரிய பரப்பு என்றும் அதை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் கூறிய எதிர்க் கட்சித் தலைவர்,பொய்யான வதந்திகளை முன்வைத்து மக்களை தவறாக வழிநடத்தி குழப்பமடையச் செய்வது பொறுப்பான அரசாங்கத்திற்கு ஏற்புடைய விடயமல்ல என்றும் கூறினார்.

ஊடகங்களை ஒடுக்குவதன் மூலமும், பொது ஊழியர்களை ஒடுக்குவதன் மூலமும், மனித சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை மீறுவதன் மூலமும் ஒரு நாட்டால் முன்னேற முடியாது என்று கூறிய அவர், தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டிற்கு ஒரு துரதிர்ஷ்டவசமான தலைவிதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நாட்டில் கொரோனா இறப்புகளோ அல்லது கோவிட் நோய்த்தொற்றாளர்களோ காணப்படக்கூடாது என்பதே தனது ஒரே பிரார்த்தனை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், முதலில் மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் பொறுப்பே எங்களுக்கு உள்ளது என்றும்  அவர் கூறினார்.

இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு பிந்தைய வரலாற்றில், எந்த எதிர்க்கட்சி தனது கட்சியின் பலத்துடன் நாட்டிற்கு பெறுமானத்தைச் சேர்த்துள்ளது என்று மனசாட்சியிடம் வினவிப்பார்க்குமாறு கோரிய எதிர்க்கட்சி தலைவர்,என்றாலும்,ஐக்கிய மக்கள் சக்தி அந்த பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற முயற்சிப்பதாக கூறியதோடு, எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு நிகழ்ச்சித் திட்டம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் அவர் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.