இதுவரை தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாத கர்ப்பிணி தாய்மார் தமது பிரதேச குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் அல்லது சுகாதார வைத்திய அலுவலகங்களுடன் தொடர்புகொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றிய முதலாவது நாடாக இலங்கை மாறி இருப்பதாகவும் திருமதி சித்திரமாலி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற "இலங்கையில் தடுப்பூசி ஏற்றலின் போதைய நிலை" தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் அவர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட முறையின் கீழ் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் 13 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இது மொத்த சனத்தொகையில் 63% ஆகும் 2 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 50 ஒரு சதவீதத்தையும் தாண்டி உள்ளது என்று கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.