இன்று காலை (22) தென்கிழக்கு அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம் 5.9 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அதனால் ஏற்பட்ட கட்டிடங்கள் குலுங்கியதுடன் அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள மக்கள் அச்சமடைந்து வீதியில் ஓடியுள்ளனர். 

இந்த நில நடுக்கமானது அவுஸ்திரேலியாவில் பாரியளவில் பதிவான நில நடுக்கங்களில் ஒன்றாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

மெல்போர்னில் உள்ள கட்டிடங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதுடன், அங்குள்ள 1000 இற்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.  (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.