உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ஆம் திகதி சர்வதேச சைகை மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அந்த தினம் இலங்கையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் சுமார் 7 கோடி பேர் காது கேளாதோர் உள்ளனர். அதில் 80 சதவீத மக்கள் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர்.
இலங்கையில் காது கேளாதோர் சுமார் 16 இலட்சத்து 18 ஆயிரம் பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது மொத்த ஜனத்தொகையில் 8.7வீதமாகும். இவர்கள் சார்பில் 32 அமைப்புக்களை உள்ளக்கிய கூட்டமைப்பும் உண்டு. இவற்றில் அங்கம்வகிப்போர் இவர்களுக்கான தேசிய செயலகம் அல்லது சமூக சேவைகள் அமைச்சில் அல்லது பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் நலன் கருதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் (23) வெகுஜன ஊடக ஒருங்கிணைப்பு கேந்திர நிலையமொன்று திறக்கப்படுகிறது.

வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தொலைநோக்கு சிந்தனைக்கு அமைவாக இது அமைக்கப்பட்டுள்ளது.

உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் தகவல்களுக்கு அமைவாக இதில் பலர் கிட்டத்தட்ட 300 வகையான சைகை மொழியைப் பயன்படுத்துகிறார்கள். உலகில் கேட்காத அல்லது பேச முடியாத மக்கள், ஆகிய அனைவருக்கும் சைகை மொழி மட்டுமே உதவி வருகிறது.
அதன் மூலம் அவர்கள் சொல்ல விரும்பும் உரையாடலை அவர்களால் விளக்க முடிகிறது.

பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உள்ள மொழிகளில் மூத்த மொழி சைகை மொழியாகும். இந்த சைகை மொழியில் பேசிய பிறகுதான் வடிவ எழுத்துக்கள் தோன்றின. அதன் பின்னரே அனைத்து மொழிகளும் தோன்றின என்பதும் வரலாறு.
மௌனங்களின் மொழி சைகை மொழி என்பதும் இந்த மொழிக்கு பேச்சு, எழுத்து தேவை இல்லை என்பதும் கேட்க இயலாமல் பார்வையில் மட்டுமே மனதால் மட்டுமே இந்த மொழியை புரிந்துகொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோர் பிறரின் உணர்வுகளை கொண்டு அவர்கள் பேசுவதையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கான மொழிதான் சைகை மொழி.கேட்கவோ பேசவோ முடியாதவர்களின் கைகள், முகம் மற்றும் உடலின் சைகைகளுடன் உரையாடும் மொழி சைகை மொழி என்று அழைக்கப்படுகிறது.

மற்ற மொழிகளைப் போலவே, சைகை மொழிக்கும் அதன் சொந்த இலக்கணம் மற்றும் விதிகள் உள்ளன.

சர்வதேச சைகை மொழிகள் தினம் 2021 – International Day of Sign Languages : எப்படி ஆரம்பமானது.
சர்வதேச சைகை மொழிகள் தினம் காது கேளாதவர்களின் வளர்ச்சிக்கு சைகை மொழி மிகவும் முக்கியமானது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை 23 செப்டம்பர் 2018 முதல் சைகை மொழிகளின் சர்வதேச தினத்தை அறிவித்தது.

காது கேளாதவர்களின் வளர்ச்சிக்கு சைகை மொழி மிகவும் முக்கியமானது. காது கேளாதவர்களின் தாய் மொழி என்றும் அழைக்கலாம்.
உலக அமைதி கூட்டமைப்பு 23 செப்டம்பர் 1951 இல் முதன்முதலாக நிறுவப்பட்டது.

இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச சைகை மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
620 இல் ஜுவான் பாப்லோ பொன்னட் காது கேளாதோர் மற்றும் காது கேளாதோரின் உரையாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் புத்தகத்தை மாட்ரிட்டில் வெளியிட்டார்.


இதற்குப் பிறகு, 1680 இல், ஜார்ஜ் டல்கர்னோவும் இதே போன்ற புத்தகத்தை வெளியிட்டார். 1755 ஆம் ஆண்டில், அபே டி லிப்பி பாரிஸில் காது கேளாத குழந்தைகளுக்கான முதல் பாடசாலையை அமைத்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.