2021. 09.15

ஏம்.யு.எம் அலிசப்ரி

நீதி அமைச்சர்

நீதி அமைச்சு கொழும்பு


கௌரவ அமைச்சர் அவர்களே,

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் குற்றவியல் மற்றும் சட்டவிரோத செயற்பாடு சம்பந்தமாக

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவர்கள் கடந்த இரு தினங்களாக அநுராதபுரம் மற்றும் வெலிகடை சிறைச்சாலைகளுக்குள் அத்துமீறி பிரவேசித்து தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த இரண்டு சம்பங்களும் இடம்பெறும் போது அமைச்சர் மது போதையில் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு செயற்பட்ட விதம் மிகவும் பாரதூரமானது என ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் சிலரை அழைத்துவரச் செய்து அவர்களை முழந்தாளிட வைத்து அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை பாரிய குற்றமாக கருதப்படுகின்றது. 

இது ஒரு பயங்கரமான சூழ்நிலை என்பதோடு அந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஆயதங்களுடன் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. அதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ள அமைச்சர் தமது நண்ப நண்பிகள் சிலருக்கு தூக்கு மரத்தை காட்டுவதாக அச்சுறுத்தியிருக்கின்றார் அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் குடிபோதையில் இருந்ததோடு ரத்வத்த அவர்களிடம் ஆயுதம் காணப்பட்டதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட நேரத்திலல்லாது வேறு நேரத்திலே இராஜாங்க அமைச்சர் இரண்டு சிறைச்சாலைகளுக்கும் அத்துமீறி நுழைந்துள்ளார். சிறைச்சாலைக்குள் பார்வையாளர்கள் வருவதற்கு தடைசெய்யப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலே அவர் சென்றுள்ளார். இது தமது அதிகாரத்தை துஸ்பிரயோகப்படுத்தும் செயற்பாடாகும். அத்தோடு இது சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஆகும். சிறைச்சாலை அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு விடுக்கப்பட்ட அழுத்தங்களாகவே கருது முடியும். அத்தோடு அவர்களின் கீர்த்தி நாமத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாகவே கருத வேண்டும். 

கௌரவ அமைச்சர் அவர்களே!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழு கூட்டத்தோடு ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாடு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலாகும்.  எனவே இது தொடர்பில் சுயாதீனமான பக்கசார்பற்ற விசாரணை ஒன்றை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம். 

இந்த சந்தர்ப்பத்தில் சிசிரிவி காட்சிகளில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பதற்கு ஆவண செய்ய வேண்டும். இந்த விசாரணைகள் சுயாதீனமாகமும் உயர்ந்த தரப்பினர்களாலும் முன்னெடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் உங்களின் சாதகமான பதில் ஒன்றை எதிர்பார்க்கின்றோம்.

நன்றி 


ரஞ்சித் மத்தும பண்டார

பொதுச் செயலாளர்

ஐக்கிய மக்கள் சக்தி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.