ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது கூட்டணி அமைத்து அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தனியாக களமிறங்குமாயின் வடமேல் மாகாண சபைக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயாராக இருப்பதாக சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.  

வடமேல் மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குமாறு பல தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகர 2013 இல் நடைபெற்ற வடமேல் மாகாண சபை தேர்தலில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு முதலமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.