சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்தையை உடனடியாக நீக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு – அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் நடந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டியே, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுறம் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை செப்டம்பர் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கொலை செய்யப்போவதாக மிரட்டிய சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவி விலக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்ய வேண்டும்’ என, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ‘அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற ராஜாங்க அமைச்சர் ஒருவர் தமிழ் கைதிகள் இருவரை முழந்தாளில் இருக்கச்செய்துள்ளதுடன் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்’ என்று, தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ‘ட்விட்டர்’ பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

(Short News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.