இலங்கையில் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு கடந்த சனிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அளவில் நாட்டு மக்களில் ஒரு கோடி 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி ஏற்றப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தடுப்பு ஊசி ஏற்றும் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் வரையில் 2 கோடி 48 இலட்சத்து 3 ஆயிரத்து 998 பேருக்கு தடுப்பு ஊசி ஏற்றப்பட்டுள்ளது. இரண்டு கோடி பத்து இலட்சத்து 54 ஆயிரத்து 101 பேருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் ஏற்றப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் 
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.