மேற்குறிப்பிட்ட கூட்டம் கடந்த 2021.07.07 ஆம் திகதி இந்நாட்டிலுள்ள முஸ்லிம் சிவில் அமைப்புகளுடன் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா Zoom ஊடாக நடாத்திய கூட்டமாகும். இதில் 24 முஸ்லிம் சிவில் அமைப்புகள் அழைக்கப்பட்டதோடு, 50 க்கும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர்.

இந்நாட்டு பிரஜைகள் என்ற அடிப்படையில் ஜனநாயக விழுமியங்களைப் பேணி நாம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி கலந்துரையாடுவது எமது ஜனநாயக ரீதியான உரிமையாகும். எனினும் ஏதோ ஒரு வகையில் இதன் ஒலிப்பதிவு சிலருக்கு சென்றடைந்துள்ளது. இந்த செயலை செய்தவர் அமானிதத்திற்கு மோசடி செய்து, பண்பாட்டு ரீதியான ஒரு தவறை செய்திருக்கின்றார். அவரை அல்லாஹ்விடத்தில் பொறுப்புச் சாட்டுகின்றோம்.


எனவே நாம் முகம் கொடுக்கக்கூடிய சவால்களை சரியான முறையில் எதிர்கொண்டு, எல்லோரும் ஒன்றுபட்டு, நல்லெண்ணத்துடன், இஸ்லாம் கற்றுத்தரும் தகவல் பரிமாற்றம் தொடர்பான அனைத்து பண்பாடுகளையும் பேணி செயற்படுவோமாக.


எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் நேர்வழிப்படுத்துவானாக.


வஸ்ஸலாம்.


அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.