கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் ஒன்பது நீண்டகால அறிகுறிகள் ஆய்வொன்றின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோய்த்தடுப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் தலைவர் டொக்டர் சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்திலேயே மேற்குறிப்பிட்ட தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த நீண்ட கால அறிகுறிகள் 90 முதல் 180 நாட்களுக்குள் ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூச்சுத் திணறல், வயிற்று நோய் அறிகுறிகள், மன அழுத்தம், மார்பு மற்றும் தொண்டை வலி, அறிவாற்றல் பிரச்சினைகள், சோர்வு, தலைவலி, தசை வலி மற்றும் பிற வலிகள் என அறிகுறிகள் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த அறிகுறிகளில், மன அழுத்தம் சுமார் 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.