15 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசி வழங்கலை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் கொவிட் 19 ஒருங்கிணைப்பாளரும் தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளருமான டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் பாடசாலை சுகாதாரப் பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அவர்,  அதிபர்களிடமிருந்து மாணவர்கள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்ற பின்னர், தடுப்பூசி ஏற்றப்படும்  என்றும் கூறினார்.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி குறுகிய காலத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.