எதிர்வரும் ஒக்டோபர் 16 இன் பின்னர் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மக்கள் சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் சுகாதார விதிமுறைகளை சரியாக பின்பற்றி செயற்பட்டால் நாட்டிலிருந்து கொவிட் தொற்றை நவம்பர் - டிசம்பர் மாதத்திற்குள் ஒழிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)