எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் சம்பள பிரச்சினைக்கு தௌிவான தீர்மானமொன்றை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

கோரிக்கைக்கு தீர்வு வழங்காவிடின் தமது தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தீர்வு வழங்கப்படும் வரை இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.