பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கிற்காக இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் 5 ஆவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Adaderana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.