Update:
நேற்று (02) முதல் காணாமல் போயிருந்த பாத்திமா ருகைய்யா இன்றைய தினம் (03) மாலை 3.15 மணியளவில் கண்டியிலுள்ள ஈரசகல பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளார்.
முன்னைய செய்தி:
கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்ட கிராமத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி ருகைய்யா ஜிப்ரியை நேற்று (02) பிற்பகல் முதல் இதுவரை (03 ஆம் திகதி பகல் 2.35 வரை) காணவில்லை.
அவர் நேற்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் வீட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இறுதியாக அவர் வரக்காபொலையில் வைத்து கண்டி நோக்கி செல்லும் பஸ்ஸில் ஏறியுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் ஒருவர் தெரிவித்துள்ளார் என்று அச்சிறுமியின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுமி பற்றிய தகவல்கள் ஏதும் தெரிந்தால் கீழுள்ள இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
jiffry 0779141038
rizaan 0778896118
Noorulla 0777844536
மேலும் இது தொடர்பிலான தகவல்களை பகிரும் போது உறுதி செய்து கொண்டு பகிரவும்.
(Siyane News)
இது வரை கிடைக்கப்பெற்ற தகவலின் படி காணாமல் சென்ற கஹட்டோவிட்டாவை சேர்ந்த பாத்திமா ருகைய்யா அவர்களின் தேடல் தொடர்பான...
Posted by Kahatowita news page Official on Sunday, October 3, 2021