நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (09) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள்:

இன்று அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது என்பதும் தோல்வியடைந்து விட்டது என்பதும் சமீபத்திய முடிவுகளிலிருந்து தெளிவாகிறது.  கொரோனா தொற்றுநோயால், நாட்டின் வருமான மூலங்ஙள் வீழ்ச்சியடைந்துள்ளன.  அரசாங்க வருவாய் வழிகளும் குறைந்துவிட்டன. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மக்களின் வருமானம் குறைந்துள்ளது.தொழிலதிபர்களின் வருமானம் சரிந்தது. கொரோனா தொற்றுநோயுடன் மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்க விடாமல் இருப்பை தக்கவைப்பதே இந்த நேரத்தில் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.அதை கச்சிதமாக முன்னெடுக்க தவறிவிட்டனர்.இன்று பெரும் வியாபார வர்க்கமே அரசாங்கத்தில் தீர்மானங்களை மேற்கொள்ளும் தரப்பாக மாறியுள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளின் அடிப்படையிலும் ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிடுவதை நாம் முன்னர் பார்த்தோம்.  இன்றுவரை இதுபோன்ற பத்து வர்த்தமானிகளை  வெளியிட்டிருப்பார். இது அத்தியாவசிய பொருட்களுக்கானது.  இருப்பினும், அனைத்து வர்த்தமானி அறிவிப்புகளையும் இரண்டு மாதங்களுக்கு செயல்படுத்த முடியவில்லை.திரும்பப் பெறுகின்றனர்.இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் அது வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த முடியாத அரசாங்கமாக மாறியுள்ளது.

அரிசி விலையை கட்டுப்படுத்த கடந்த வாரம் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்குள், அரிசி ஆலை உரிமையாளர்கள் வந்து பொருட்களின் விலையை முடிவு செய்தனர். அது எப்படி நடந்தது? அரசாங்கத்துடன் உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் ஊடகங்கள் வந்து விலையை மேற்கோள் காட்டினர். 

பால் மா, மாவு, எரிவாயு, சிமெனந்து போன்றவற்றின் விலைக் கட்டுப்பாட்டை அரசாங்கம் மீண்டும் நீக்கியுள்ளது. இது சார்ந்த தொழிலதிபர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவார்கள், இது தான் பால் மாவின் விலை, இது தான் எரிவாயுவின் விலை, இது தான் சிமென்ந்தின் விலை மற்றும் இது தான் மாவின் விலை என்று கூறப்படலாம்.

வியாபாரிகளே விலைகளை தீர்மானிப்பதாக இருந்தால் அரசாங்கம் என்ற ஒன்று தேவையில்லை.

விலைகளை அதிகரிப்பதை மட்டுமல்லாமல் அந்த விலைகளை வெளியிடுவதையும் நிறுத்தி, தனியார் வர்த்தகர்களே விலைகளை நிர்ணயிக்க அனுமதிப்பதையும் பார்க்கிறோம்.  அதனால்தான் இந்த நாட்டின் அரசாங்கம் மக்களை மக்களின் சதையை உறிஞ்சி பிளிகிறது என்று கூறஉகிறோம். வெட்கப்பட வேண்டும்.  மக்கள் இதற்காகவா வாக்களித்தனர்.ஜனாதிபதி உட்பட ஒட்டுமொத்த அமைச்சரவையும் வெட்கப்பட வேண்டும். 

பால் மாவின் விலையை கட்டுப்படுத்த முடியாது. மாவின் விலையை கட்டுப்படுத்த முடியாது. அரிசியின் விலையை கட்டுப்படுத்த முடியாது. சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த முடியாது. பருப்பின் விலையை கட்டுப்படுத்த முடியாது. எதற்காக ஓர் அரசாங்கம்? இன்று சகலதும் வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.வீட்டிற்கு செல்வதை விட சிறந்தது எதுவும் இல்லை என்று நான் சொல்கிறேன்.நாட்கள் கடக்கக் கடக்க ஆளும் தரப்பு உறுப்பினர்களின் இருக்கும் சுயமரியாதையும் இழக்கும் நிலை ஏற்ப்படும். முன்னோக்கி செல்லும் சுயமரியாதையையும் இழக்கப்படும்.அன்று நாட்டில் டொலரின் விலைகள்,எண்ணெய் விலைகள் அதிகரித்த போது ஏன் இவ்வாறான ஓர் அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று கூசலிட்டவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்.

அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நியமிக்கப்பட்டதை நாம் கடந்த காலத்தில் பார்த்தோம். அந்த ஆணையர் அவசர கால சட்டத்தை விதித்தார். நுகர்வோர் விவகார சட்டத்தை திருத்தங்களுக்கு உட்படுத்தினர்.பொருட்களின் விலை நிர்ணயம் செய்தாலும் மொத்தமாக விற்பவர்களுக்கு அபராதம் விதிக்க ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது.இன்று இதுவும் சுருங்கும் நிலையில் உள்ளது.அது ஏன் திருத்தப்பட்டது? இந்த அரசாங்கம் எடுத்த ஒவ்வொரு முடிவும் இன்று தோல்வியடைந்ததை நாம் காணலாம்.  இதற்கு மக்கள் விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.அரசாங்கம் மக்களின் பக்கம் இல்லை, மாறாக கருப்பு சந்தைப்படுத்துபவர்களின் வணிகத்தின் பக்கம் அவர்களுக்கு சுதந்திரம் அளித்து விலைகளை அவர்கள் விரும்பியபடி தீர்மானிக்கிறது.  இருபதாம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் பத்தொன்பதாம் திருத்தம் இரத்து செய்யப்பட்டது. அதிகாரம் போதாது என்று மக்களிடம் ஜனாதிபதி கூறினார். பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெருன்பான்மையைக் கொடுத்தனர். அவசரகால நிலை கொண்டுவரப்பட்டது. நுகர்வோர் விவகார சட்டம் திருத்தப்பட்டது. மற்றொரு அதிகாரம் தேவை என்று அத்தியவசிய சேவைகள் ஆணையாளரை நியமித்தனர்.இவ்வாறு மேற்கொண்டும் கறுப்புச் சந்தை முதலாலிகளை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் முடியாதுள்ளது. ஏனெனில் அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு அரசாங்கத்துடன் சில தொடர்புகள் உள்ளன. மாபியா முற்றிலும் உண்டு. ஒருவருக்கொருவர் பிணைப்பில் இயங்கும் மாபியாக்கள். அரசாங்கத்தின் பின்னால் உள்ள பெரியவர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பால் மாவின் பற்றாக்குறை இருந்தது. எரிவாயு பற்றாக்குறை இருந்தது. சிமெண்ட் தட்டுப்பாடு இருந்தது. அரசாங்க சூத்திரம் உள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையர் மறைத்து வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் வெளியே கொண்டு வர வேண்டும். காரியங்களைச் செய்தபின் அரசாங்கம் இறுதியாக கறுப்புச் சந்தை வியாபாரிகளின் முன் மண்டியிட்டது. இந்த நாட்டில் 9 மில்லியன் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்து பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெருன்பான்மையைக் கொடுத்தனர்.  ஒரு உண்மையான அரசாங்கம் தொழிலதிபர்களுக்கு முன்பாக மண்டியிடவில்லை. அப்போது நீங்கள் சர் உடன் விளையாட முடியாது என்று சொன்னால் நீங்கள் திரும்ப மாட்டீர்கள் என்று கூறப்பட்டது. அரசாங்கத்தின் மீதான மக்களின் கோபமும் வெறுப்பும் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அபரிமிதமாக உயர்கிறது. அந்த கோபமும் வெறுப்பும் வீதிகளுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. அரசாங்கம் மக்களின் பக்கம் அல்ல கறுப்புச் சந்தை மாபியாவின் பக்கமே உள்ளது. அரசாங்கம் விரைவில் மக்களின் வெறுப்பையும் கோபத்தையும் உணரத் தொடங்கும்.

நம் நாட்டில் திருமதி நிருபமா ராஜபக்ச மற்றும் திரு நடேசன் ஆகியோரின் பெயர்கள் சமீபத்தில் வெளிவந்த பன்டோரா பத்திரங்களில் கட்டோம். நம் நாட்டின் பல பெயர்கள் இவ்வாறு வெளிப்பட்டன. நாங்கள் உண்மையைக் கண்டோம். திருக்குமார் நடேசனை இப்போது ஜனாதிபதி இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் விசாரிக்க உத்தரவிட்டார். நாங்கள் ஒரு சுயாதீன நீதித்துறையை ஒரு ஆணைக்குழுவாக அதை  உருவாக்கினோம். நாங்கள் ஒரு சுயாதீன நீதித்துறையை நிறுவினோம். நாங்கள் ஒரு பொது சேவை ஆணைக்குழுவை உருவாக்கினோம். நாங்கள் பொலிஸ் ஆணைக்குழுவை பலப்படுத்தினோம்.இத்தகைய ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை ஜனாதிபதியின் பங்களிப்பிற்கு அடிபணியச் செய்துள்ளது 20 ஆவது திருத்தம்.இத்தகைய ஒடுக்குமுறையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுதந்திரமாக செயல்படுகிறதா இல்லையா என்பது கேள்வியே. எதிர்க்கட்சித் தலைவர் ஒரு சர்வதேச ஏற்பைடைய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரினார், ஆனால் அரசாங்கம் அதை ஏற்கவில்லை.இது வெறும் ஊடக நிகழ்ச்சி அல்ல, இது தவறான சம்பாத்தியத்தை மறைக்கும் முயற்சி.அவ்வாறு செய்யாதீர்கள்.

இன்று அரசாங்கம் எல்லா இடங்களிலும் அழுத்தங்களை சந்தித்து வருகிறது. பொருளாதாரம் சரிந்து வருகிறது. டொலர்கள் இல்லை. இன்று இந்த நாட்டின் அனைத்து அரச வளங்களும் வெளிநாட்டவர்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த நாடு அராஜக நிலையில் உள்ளது.சீன இந்திய அமெரிக்க முற்தரப்புகளின் அரசியல் மற்றும் இராணுவ மோதல்களுக்குரிய களமாக எமது நாடு மாறிவருகிறது.நமது நாடு ஒரு ஆபத்தான காலகட்டத்திற்கு வந்துவிட்டது, இந்த நாட்டு மக்களை இந்த பயணத்தை நிறுத்த முன்வர வேண்டும் என்று சொல்கிறோம். நேரம் வந்துவிட்டது.மக்கள் முன்வராவிட்டால் எமதும் உங்களதும் சந்ததியினர் வாழ்வதற்கு ஏற்ற ஒரு நாடு இல்லாமல் போகும் நிலை உருவாகும். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.