தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் மெலிபன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் இல்யாஸ் கரீமின்  நன்கொடையில் உருவான கட்டிடத்தொகுதி மீலாதுன் நபி தினமான இன்று (19) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பாடசாலையானது ஒரேயொரு கட்டடத்தில் நீண்ட நாட்களாக இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. 

Updated:

தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் தொழில் அதிபர்  இல்லியாஸ் அப்துல் கரீம்  அவர்களின்  நன்கொடையில்  4 மாடி கட்டடம்  இன்று திறந்து வைப்பு!

அஷ்ரப் ஏ சமட் 

தெஹிவளை மூர் வீதி மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் தொழில் அதிபர் அல் ஹாஜ் இல்லியாஸ் அப்துல் கரீம்  அவர்களின்  நன்கொடையில்  நிர்மாணிக்கப்பட்ட 4 மாடி கட்டடம்  இன்று திறந்து வைக்கப்பட்டது.

தெஹிவளை பாலத்தினை அருகே செல்லும் மூர் வீதியில் மீலாத் முஸ்லிம் பாடசாலை கடந்த 40 வருடகாலமாக 24 போ்ச் காணியில்  இயங்கி வந்தது.

 கொழும்பு மவாட்டத்தில் 24 பேர்ச் காணியில் அமையப் பெற்றுள்ள   ஓரே ஒரு பாடசாலை மீலாத் வித்தியாலயமாகும்.     

மிகவும் போராட்டத்துக்கு   மத்தியில் தற்போதைய அதிபா் சுகைா் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துடன்  இனைந்து இக் காணிக்கான வரைபடம் உறுதிப்பத்திரம் ஆகியனவற்றை  சேகரித்து  இக் கல்லுாாியில் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. 

இக் கல்லுாாிக்காக ஈ எம் என். மெலிபன் கம்பனியின் உரிமையாளா் இல்யாஸ் ஹாஜியின் நன்கொடையின் கீழ் 4 மாடிகளை கொண்ட   இக்கட்டிடம் நிர்மாணிக்கபபட்டுள்ளது.    

289 மாணவ மாணவிகள் தரம்  1 முதல்  11ஆம் வகுப்பு வரை இங்கு கல்வி பயிலுகின்றனா். 22 ஆசிரியா்கள் உள்ளனா். கடந்த 3 வருட காலமாக கட்டிடம்  நிர்மாணிக்கும் வரை  போதிய வகுப்பறை கட்டிடம் இன்மையால் அருகில் உள்ள மெதடிஸ் கல்லுாாி 6 வகுப்பறைகளை இப் பாடசாலைக்கு வழங்கியது.  6 வகுப்பறையில் 11 வகுப்புக்களை நடாத்தி வந்தாா்கள். 

 தற்போதைய அதிபரின் திறமையான நிர்வாகத்தின் கீழ் இம்முறை க.பொ.த.சாதாரண தரத்தில்  உயா்தரத்திற்கு நுாறுவீதம் சித்தியடைந்துள்ளாா்கள். 

கல்விக்கு உதவி செய்பவர் என்றும் மரணிப்பதில்லை. கற்பவனாக இரு, கற்றுக் கொடுப்பவனாக இரு, கற்பவனுக்கு உதபுவனாக இரு ஆனால் நான்காவது ஆளாக இராதே -  

என்ற  அல் குர் ஆன் வசனத்தில் முதன் முதலில்  அல்லாஹ்விடமிருந்து  உலகிற்கு இறங்கிய முதல் வசனமே   ”இக்ரஹ் ” ஓதுவீராக, படிப்பீராக “ 

அந்த வகையில் கொழும்பில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்குச் சென்றால் அங்கு கட்டங்கள், காணிகளை கல்விக்காக தனவந்தா்களே அமைத்துக் கொடுத்துள்ளாா்கள். மறைந்த சேர் ராசிக் பரீட் அவர்கள் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிா் கல்லுாாிக்கு காணியை வழங்கியிருக்கின்றாா்கள். கொழும்பு சாகிராக் கல்லுாாிக்குச் சென்றால்  கொடை வள்ளல்  எம்.ரி.எச். அப்துல் கபூர், பாபிச்சி மரிக்காா், அறிஞா் சித்திலெப்பை,  பேராதனை பல்கலைக்கழக ஜஸ்ட்டிஸ் அக்பா், நளிம் ஹாஜியாா் , அன்மையில் காலம்சென்ற  Zam ஜெம்ஸ் உரிமையாளா்  றிபாய் ஹாஜியார்  போன்றோரின்  பெயா்களே அந்தக்  கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருக்கும். 

 அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கி கட்டிய  கட்டிடங்கள் ஒரு சிலதையே அங்கு காணக்கூடியதாக இருக்கும்.  

அந்த வகையில்   கொள்ளுப்பிட்டியில் இருந்து மொரட்டுவை, பாணந்துரை வரை முஸ்லிம் பாடசாலை என்றால்  மீலாத் முஸ்லிம் பாடசாலை ஓன்று மட்டுமே உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(Siyane News)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.