கொழும்பு பெரிய பள்ளிவாசல் பீரங்கி 

Canon of Colombo Grand Mosque 

(பஸ்ஹான் நவாஸ்)



 கொழும்பு பெரிய பள்ளிவாசல் என்பது இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியலில் அதிகம் தொடர்புபட்டதாகும்.

 தலைப்பிறை, நிவாரணங்களை திரட்டுதல், முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை வரவேற்றல், சமூகம் சார்ந்த நீதிமன்ற தீர்ப்புகளை பெற்றுக்கொள்ளுதல் உட்பட பல துறைகளிலும் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் வகிபாகம் கணிசமானது. 

பள்ளிவாசலின் நுழைவாயிலில் Canon எனப்படும் பீரங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு 500 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ரமழான் மாதத்தில் ஸஹர் முடிவடையும் போது பீரங்கியில் இருந்து வெடிவைப்பார்கள். பின்னர் நோன்பு துறக்கும் இப்தார் நேரத்திலும் இதனை வெடிக்க வைப்பார்கள்.  இதன் மூலம் கொழும்பு நகர மக்கள் உரிய நேரங்களை அறிந்துகொள்வர். 

இலங்கை வானொலியில்  மர்ஹூம் ராமிஸ் ஆலிம் அவர்களின் அஸான் ஒலிபரப்பப்படும் வரை (மர்ஹூம் ராமிஸ் ஆலிம் இலங்கை வானொலியில் முதலில் அஸான் சொன்னவர்கள்) Canon எனப்படும் பீரங்கி பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.  ஆனால் அரபு நாடுகளில்  நோன்பு துறக்கும் நேரத்தை அறிவிக்க இன்றும் Canon பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.