மேல் மாகாணத்தில் இன்று (15) முதல் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு வாகன வருமான பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக வாகன வருமான பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

மேல் மாகாண மோட்டார் வாகன திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மேல் மாகாணத்திலுள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாகவும் அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று மேல் மாகாண ஆளுநர் குணதிலக்க தெரிவித்தார். 

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் - http://www.motortraffic.wp.gov.lk

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.