(ரிஹ்மி ஹக்கீம்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தின் கீழ் கிராமிய பொருளாதாரத்தை வளர்ப்பதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மற்றுமொரு "சுபீட்சத்திற்கான உற்பத்தி கிராமம்" (சௌபாக்கியா உற்பத்தி கிராமம்) ஒன்று மீரிகமை தேர்தல் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வணிக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும்  இவ்வேலைத்திட்டத்தின் கீழ் 500 "சுபீட்சத்திற்கான உற்பத்தி கிராமங்கள்" அமைக்கப்படவுள்ளன. 

அதன் ஓர் அங்கமாக இன்று (22)  மீரிகமை தேர்தல் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்ட "3A நால்ல சுபீட்சத்திற்கான உற்பத்தி கிராமம்" களிமண் மற்றும் சீமெந்து தொடர்பான உற்பத்தி கிராமத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன, மீரிகமை பிரதேச சபை உப தவிசாளர் டிலான் ரத்னாயக்க, மீரிகமை பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். (Siyane News)







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.