பென்டோரா பத்திரிகை வெளிப்படுத்தியுள்ள ஆவணங்களில் தனது பெயரும், தனது மனைவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் பதிலளித்துள்ள பிரபல தொழிலதிபரான திருக்குமார் நடேசன், தானும் மனைவியும் முழுமையாக அப்பாவிகள் எனத் தான் உறுதிப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலுள்ள சொத்துக்கள் தொடர்பான பென்டோரா ஆவணங்களில் நடேசனினதும், அவரது மனைவியான நிரூபமா ராஜபக்‌ஷ வினதும் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வுக்கு எழுதியுள்ள கடிதத்திலே​யே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள திருக்குமார் நடேசன், எப்பிழையையும் செய்யவில்லை எனக்கூறியுள்ளார்.

இதேவேளை, சுயாதீன விசாரணையாளர் ஒருவர் மூலம் தாமதமில்லாமல் இவ்விடயத்தை விசாரணை செய்யுமாறு நடேசன் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியொருவர் விரும்பத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.