இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக
அலரி மாளிகையில் ஒலித்த
"யா நபி ஸலாம் அலைக்கும்" பைத்து
- வரலாற்று விமர்சகர்கள்
புகழாரம்
( மினுவாங்கொடை நிருபர் )
அலரி மாளிகையில் 19 ஆம் திகதி மாலை இடம்பெற்ற புனித மீலாத் தினத்தன்று,
அஷ் - ஷெய்க், அஸ் - ஸெய்யிது, கலாநிதி ஹஸன் மௌலானா ( அல் - காதிரி ):
"யா நபி ஸலாம் அலைக்கும்" என்று படிக்க பிரதமர், வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள், சர்வமதத் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விசேட பிரமுகர்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த சபையும் எழுந்து நின்று, நபிகளாரின் பெயரில் படித்த "யா நபி ஸலாம் அலைக்கும்" பைத்துக்கு மரியாதை செலுத்தினர்.
இது இலங்கை வரலாற்றில், முதற் தடவையாக அலரி மாளிகையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இது இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில், முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் காலத்தால் அழியாத ஒரு சிறப்பு நிகழ்வாகும் என, வரலாற்று விமர்சகர்களால் பேசப்படும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )
24/10/2021