ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்த பிரபல எழுத்தாளரான ஜுனைதா சரீப் காலமானார்.இவரது ஜனாஸா நல்லடக்கம் காத்தான்குடியில் இடம்பெற்றது.மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வர் முஸ்லிம் விவகார ராஜாங்க அமைச்சராகப் பணிபுரியும் போது இவர் முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அப்பதவியில் அவர் ஒரு வருட காலம் பணிபுரிந்தார்.மர்ஹும் சரீப் மிகவும் நேர்மையான ஒருவர்.முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கலாபூசண தெரிவுக்குழுவின் தலைவராக அவர் நீண்ட காலம் பணிபுரிந்தார்.
நான் பல வருடங்களாக அவருடன் அங்கத்தவராக அதில் பணிபுரிந்தேன் ஒரு வருடம் அவர் சுகவீனமுற்றிருந்ததனால் நான் அத்தெரிவுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தேன். .இதனால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.அவர் கடைசியாக எழுதிய விடியும் வரை என்ற நாவலை நவமணி தொடராகப் பிரசுரித்தது .
அக்கதை கடுமையான நோய் ஒன்றால் பாதிக்கப்பட மனைவியின் உயிரைக் காப்பதற்க்கு. கணவன் படும் பாடுகளை விளக்குகிறது.இக்கதை அவரது நிஜ வாழ்க்கை பற்றியது.அநேகரை அழ வைத்த கதை.சகோதர் சரீபின் மறைவு நாட்டுக்கு ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரது மறுமை வாழ்வுக்கு பிரார்த்திப்போமாக.
என்.எம்.அமீன்