06 மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பிய சமூக பேஸ்புக், வட்சப், இன்ஸ்டாக்ராம்!

Rihmy Hakeem
By -
0

 

Update:

நேற்றிரவு (04) 09.30 மணியளவில் செயலிழந்த பேஸ்புக், வட்சப் மற்றும் இன்ஸ்டாக்ராம் இணையத்தளங்கள் மற்றும் செயலிகள் சுமார் 06 மணித்தியாலங்கள் கழித்து வழமைக்கு திரும்பியுள்ளன.

முன்னைய செய்தி:

பேஸ்புக் இணையத்தளம், செயலி மற்றும் வட்சப், இன்ஸ்டாக்ராம் செயலிகள் திடீரென செயலிழந்துள்ளதாக சமூக ஊடக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் இது தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவின் நிறைவேற்று அதிகாரி Andy Stone தெரிவிக்கையில், 

இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக நாம் இயன்றவரை உழைக்கிறோம். அதனால் ஏற்பட்ட சிரமங்களிற்கு மன்னிப்பு கோருகிறோம் என்றார்.

வட்சப் மற்றும் இன்ஸ்டாக்ராம் ஆகிய செயலிகள் பேஸ்புக் நிறுவனத்தினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)