இன்று (13) இரு வாரங்களுக்கு மேல் மாகாணத்தில் வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதான செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 வாகன அனுமதி பத்திரம் சம்பந்தப்பட்ட கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதான செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த கணினி கட்டமைப்பை சரிசெய்யும் வரை தற்காலிகமாக இன்று (13) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை வாகன வருமான பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதான செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2021.08.12 முதல் காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திர உரிமையாளர்களுக்கு 2021.12.31 வரை சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.