பன்டோரா பேபர்ஸ் மூலம் வெளியான விடயங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்சவின் கணவரும் தொழிலதிபருமான திருக்குமார் நடேசனுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

நாளை (08) அவரிடம் இருந்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக  அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை திருமதி.நிருபமா ராஜபக்‌ஷ மற்றும் திரு.திருக்குமார் நடேசன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பன்டோரா பத்திரம் மூலம் வெளியிடப்பட்ட விடயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் இன்று(07) இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.