பிரதமர் ராஜபக்சவுடனான கலந்துரையாடலும் தோல்வி : ஆசிரியர் சங்கங்கள் எடுத்துள்ள தீர்மானம்!

Rihmy Hakeem
By -
0

 


சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த அதிபர், ஆசிரியர் சங்கங்கள் தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இன்று (13) தீர்மானித்துள்ளனர்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில், இன்று தீர்மானம் ஒன்றிற்கு வரவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. அதனடிப்படையில்  இன்றைய தினம் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் (12), ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)