கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீர்மானத்தை எடுப்பது தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேவை ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மாத்திரம் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

adaderana

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.