இன்றும் பல இடங்களில் பலத்த மழை வீழ்ச்சி!

Rihmy Hakeem
By -
0


 2021 ஒக்டோபர்31ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2021 ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது.

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)