கம்பஹா மாவட்டம், மீரிகமை, அக்கர 20 பிரதேசத்தில் விஷேட அதிரடிப்படையினர் நடாத்திய சோதனையின் போது அனுமதிப்பத்திரமின்றி  வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட 39 வயதான நபர் மீரிகமை பகுதியில் வசிப்பவர் ஆவார். 

அவருடைய வீட்டை சோதனையிட்ட போது  75 கிலோ அமோனியா நைட்ரைட், 130 கிராம் அளவிலான 81 ஜெலிக்னைட் குச்சிகள், மின்சாரமற்ற 107 டெடனேற்றர்கள் உட்பட பல பொருட்களை விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றினர்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் மீரிகமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.