பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தற்போது இருக்கும் சிறைக்கூடம் மாலை 5 மணிக்கு பூட்டப்படுவதால் அவருக்கு சிறுநீர் கழிக்க போத்தலை பாவிக்க வேண்டியிருப்பதாகவும், வெளியில் இருந்து சாப்பாடு அழைப்பிப்பதற்கும் முடியாமல் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை அவருக்கு சிறையில் வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்ல இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இஸ்லாம் சமயத்தை பின்பற்றும் அவர் இரவு நேரங்களில் இரு முறை தண்ணீரை பயன்படுத்த வேண்டியிருப்பதால் அவர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஆளும் கட்சி பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உங்களது ஆட்சியில் தான் எதிர்க்கட்சியில் இருக்கும் போது சிறையில் இருந்த நேரம் போத்தல் பாவிக்க வேண்டி இருந்ததாகவும் அது குறித்து முறையிடவில்லை என்றும் கூறினார்.

எனினும் தொடர்ந்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தை தொடர்பு கொண்ட அமைச்சர் ஜோன்ஸ்டன், சபையில் மீண்டும் எழுந்து ரிஷாட் பதியுதீனின் பிரச்சினையை தாம் தீர்த்ததாக தெரிவித்தார்.

தான் ரிஷாட்டின் பிரச்சினைகளை ஆணையாளருக்கு விளக்கியதாகவும் அதனை தொடர்ந்து அவருக்கு மாலை 5.00 முதல் காலை 6.00 மணி வரை மலசலகூடத்தை பாவிப்பதற்கு அனுமதி வழங்க முடியும் என்று சிறைச்சாலை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.