செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றில் தாயின் மூன்றாவது கணவரால் இரண்டு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில், வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் மகள்கள்  தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளமை தொடர்பில் கிராமத்தவர்களால் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொலிசார் தாயினையும் தாயின் மூன்றாவது கணவரையும் கைது செய்துள்ளார்கள். 

ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு பிறந்த இரண்டு பதின்ம அகவை சிறுமிகள் தாயின் மூன்றாவது கணவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளகிவந்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தாயின் கணவரையும் சிறுமிகளின் தாயினையும் கைது செய்த முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளுக்கு உட்படுத்தியபோது தனது பிள்ளைகள் மூன்றாவது கணவரால் தொடர்ச்சியாக துஸ்பிரயோக்திற்கு உள்ளாகி வருகின்றமை தாய்க்கு தெரிந்தும்  அதற்கு உடந்தையாக இருந்ததாக தாய் மீது குற்றம் சமத்தப்பட்டுள்ளது.

இவர்களை கடந்த 13ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.