அரசாங்கத்தை நாங்கள் பொறுப்பேற்கும் போது நாட்டின் பொருளாதார வேகம் 2.2 க்கு குறைந்து இருந்தது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் காமினி லொக்குகே,

பொருட்களின் விலைகள் அதிகரித்தமை அரசாங்கத்தின் தவறல்ல என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு
தெரிவித்தார்.

வெளிநாட்டு கடன்களை செலுத்தியுள்ளோம். எங்களுடைய அரசாங்கம் எப்படியாவது வெளிநாட்டு கடன்களை செலுத்தும். ஐக்கிய அமெரிக்க டொலரின் விலை
அதிகரித்தமையால் பால்மா, ​கோதுமை மா, காஸ், உள்ளிட்ட பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

அரசாங்கத்தின் தவறால் இவ்வாறு பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்றார். இன்னும் சில நாள்களில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. 300 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகளை எதிர்வரும் 21ஆம் திகதியன்று
திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

கொரோனா​ தொற்றை வெற்றிக்கொண்டு பாடசாலைகளை திறக்கமுடியும் என யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்நிலையில்தான், பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன என்றார்.

தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.