புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அரசியலமைப்புச் சட்டவாக்க சபைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் மூன்று மாத காலத்தை வழங்கியுள்ளார்.

செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் இதை நிறைவு செய்யுமாறு குறித்த பணிக்காக நியமிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டவாக்க சபைக்கு முன்னர் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

எனினும் அந்த பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால், மேலும் மூன்று மாத காலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டவாக்க சபை, கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வாரத்தில் சில முறை கூடி இந்த விடயம் தொடர்பாக முன்வைக்கப்படும் யோசனைகளை ஆராய்ந்து வருகிறது.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நியூஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.