18 மற்றும் 19 வயது பிரிவைக்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றும் நடவடிக்கை பாடசாலைகளில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும். கல்வி மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.

அதன் அடிப்படையில், கொழும்பு மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக இந்த வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, ஹோமாகம, ஸ்ரீஜயவர்த்தனபுர, பிலியந்தல ஆகிய கல்வி வலயங்களில் தடுப்பூசி ஏற்றும் பணி இடம்பெறவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.