இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மீலாத் கவியரங்கம்

*மீலாத் தினமான 19/10/2021 செவ்வாய்க்கிழமை பி.ப. 3.25 க்கு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் விசேட மீலாத் கவியரங்கம் ஒலிபரப்பாகும்.* 

12 கவிஞர்கள் கலந்து கொள்ளும் இக் கவியரங்கிற்கு 
*என். நஜ்முல் ஹுசைன்* தலைமை தாங்குகிறார்.

*"அருட்கொடையாய் வந்துதித்த அண்ணல் நபி*
*அலங்கரிப்போம் அவர் புகழை கவிதை வழி"* 

எனும் தலைப்பில் இடம் பெறும் கவியரங்கில் 

கவிஞர்கள் 
*🎙️கலாபூஷணம் மௌலவி காத்தான்குடி பௌஸ்* - இறையச்சத்தில் உச்சம் என்றும், 

*🎙️எம். எஸ். அப்துல் லத்தீப்* - மன்னிப்பில் மாண்பு என்றும்,  

*🎙️யாழ் அஸீம்* - தலைமையில் தகைமை என்றும், 

*🎙️கவிநேசன் நவாஸ்* - ஈகையில் உவகை என்றும்,  

*🎙️கிராமத்தான் கலீபா* - உழைப்பில் களிப்பு என்றும்,   

*🎙️போருதொட்ட ரிஸ்மி* - வாய்மையில் செம்மை என்றும்,  

*🎙️கலாபூஷணம் மஸீதா அன்சார்* - பணிவில் கனிவு என்றும், 

*🎙️பஸ்யால எஸ். ஏ. இஸ்மத் பாத்திமா* - பொறுமையில் பெருமை  என்றும்,  

*🎙️ராஹிலா ஹலாம்* - நேர்மையில் கூர்மை என்றும், 

*🎙️சிமாரா அலி (ஊதாப்பூ)* -   வறுமையில் செழுமை என்றும்,

*🎙️சட்டத்தரணி நூருஸ் ஷப்னா நஜ்முல் ஹுசைன்* -  எளிமையில் இனிமை என்றும், 

*🎙️மக்கொனை ருமானா ஸுல்பத் பஸ்லி* - நேசத்தில் வாசம் என்றும் 

கவிதை பாடுகிறார்கள்.

 முஸ்லிம் சேவை பணிப்பாளர் *எம். ஜே. பாத்திமா ரினூஸியாவின்* மேற்பார்வையில் *ஏ. எம். முஹம்மத் றலீம்* நிகழ்ச்சியைத் தயாரித்தளிக்கிறார்.
.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.