நாட்டிற்கு பெரும் சக்தியை வழங்கும் இந்த நாட்டின் இளம் தலைமுறை நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், நாட்டின் இளம் தலைமுறையினரை கடவுச்சீட்டு வரிசைக்கு இழுத்துச் சென்ற அரசாங்கம் இளைய சமூகத்தின் வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறுகின்றார்.


நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க காத்திருக்கும் முழு இளைய தலைமுறையும் விரக்தி நிலைக்கு இட்டுச் சென்று எதிர்காலத்தைப் பற்றிய ஒரு ஆபத்தான அவநம்பிக்கையை உருவாக்கிய பிறகு நாட்டுக்கு என்ன செய்ய வேண்டி இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்புகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பிற்பகல் கொவிஹத கெஸ்ம நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஒருங்கிணைவாக அன்னாசி செய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் அவலங்களை விசாரிக்கும் முகமாக தோம்பே கிரிந்திவெல விவசாயிகளை சந்தித்தார்.இந் நிகழ்வில் பங்கேற்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

யாரையும் தொந்தரவு செய்யாமல் தனது சொந்த பலத்தால் இந்த நாட்டிற்கு உணவு வழங்கிய விவசாயிகளை அரசாங்கம் தன்னிச்சையாக நினைத்த போக்கில் அவர்களை படுகுழியில் தள்ளிவிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்தால் இழப்பீடு தருவதாக அரசாங்கம் இன்று பெருமை பேசினாலும்,குறைந்தபட்சம் சில மாதங்களாக வீதிகளில் இருக்கும் ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடு மற்றும் பிரச்சிணைகளைத் தீர்க்க நிதியை ஒதுக்குவதற்குக் கூட திறனற்ற அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சிணைகளுக்கு  பதிலளிக்கும் முகமாக பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது எவ்வாறு என்று தான் கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, மாகாண சபை உறுப்பினர் ஜோர்ஜ் பெரேரா மற்றும் அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட  ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


வலையொளி இணைப்பு-
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.