ஆசிரியர் - அதிபர் போராட்டம் குறித்து பெற்றோருக்கு தெளிவுபடுத்த அடுத்த மூன்று நாட்களில் முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிடும் போதே சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கு முன்பாகவும் பெற்றோர்களின் பங்களிப்புடன் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஆசிரியர் - அதிபர் போராட்டத்தில் ஏனைய தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் வரவு - செலவுத் திட்டத்துக்கு முன்னர் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க  தயார் என மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.