எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் இன்றையதினம் (18) மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும்  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் இந்த கோரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டது என்றார்.

தற்போதைய நிலை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ஒரு லீற்றர் பெற்ரோலுக்கு 16 ரூபாயும் டீசல் லீற்றருக்கு 30 ரூபாயும் நட்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார்.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிப்பதால் நட்டம் அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.