ஆசிரியர் தினமான எதிர்வரும் புதன்கிழமை (06) அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
312 கல்வி நிலையங்களை மையமாகக்கொண்டு மேற்படி பாரிய ஆர்ப்பாட்டத்தை நடாத்தவுள்ளதாக தெரிவித்த அவர், அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு மற்றும் மாணவர்களின் கல்வி உரிமையினை பாதுகாப்பது ஆகியவற்றை பிரதான காரணிகளாக வைத்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுடன் குறைந்தளவானோரின் பங்களிப்புடன் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க,
எமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை வழங்கினால் தொழிற்சங்க நடவடிக்கைகளை நாம் கைவிட தயார் என்று தெரிவித்தார். (Siyane News)