கஹவத்தை, வட்டபொத்த தோட்டத்தில் வசிக்கும் மக்கள் மீதும், சொத்துகளுக்கும் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த கும்பலால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த பெண் மற்றும் மூன்று இளைஞர்கள் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த கும்பலால் தோட்டக் குடியிருப்பொன்றும், நான்கு ஓட்டோக்களும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. தாக்குதல்களுக்கு உள்ளான இளைஞர்களில் ஒருவருக்குச் சொந்தமான சுயதொழிலில் ஈடுபடும் இயந்திரங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க நகையும் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யடாகர கிராமத்தில் வசிக்கும் கும்பலே, ​தோட்டத்துக்குள் புகுந்து இவ்வாறு தாக்குதலை நடத்தியுள்ளது.

மேற்படி சம்பவத்தை கேள்வியுற்று அத்தோட்டத்துக்குச் சென்றிருந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப- செயலாளர் ரூபன் பெருமாள் அச்சத்தில் வாழும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து, இவ்விடயம் குறித்து இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.